மாணவ, மாணவியர்களுக்கு தற்கொலை எண்ணத்தினை தவிர்க்கும் பொருட்டு ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      மதுரை
mdu corp news

மதுரை - மதுரை மாவட்டம், விஸ்வநாதபுரத்தில் அமைந்துள்ள ரோட்டரி கிளப் கூட்ட அரங்கில் சமூகபாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் வளரிளம் பருவத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தற்கொலை எண்ணத்தினை தவிர்க்கும் பொருட்டு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்
 .கொ.வீர ராகவ ராவ்  குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து தெரிவிக்கையில்:
 தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் மதுரை மாவட்டத்தில் வளரிளம் பருவத்திலுள்ள மாணவ, மாணவியர்களுக்கு தற்கொலை எண்ணத்தினை தவிர்க்கும் பொருட்டு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகின்றது.  அதே போல் இவ்வாண்டும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி வழங்கப்படுகின்றது.
  இப்பயிற்சியின் மூலம் உளவியல் பூர்வமாக குழந்தைகளைக் கையாளுதல், பள்ளித்தேர்வுகள் மற்றும் அரசு பொதுத்தேர்வு காலங்களில் பள்ளித்தேர்வுகள் மற்றும் அரசு பொதுத்தேர்வு காலங்களில் மாணவ, மாணவியர்களிடையே தேர்வு அச்சத்தின் காரணமாக ஏற்படும் தற்கொலை எண்ணத்தினை தவிர்ப்பதற்கும், குழந்தைகளை அவ்வப்பொழுது கண்காணித்து அவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்குதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகின்றது.  இப்பயிற்சியைத் தொடர்ந்து பயிற்சி பெற்ற 100 ஆசிரியர்கள் தங்கள் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும்.  மேலும் ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவ, மாணவியர்களின் முழுவிபரம், தகுதி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  மாணவ, மாணவியர்களுக்கு சமூகம், சுற்றுசூழல் குறித்த கல்வியினையும், நல்லொழுக்கத்தையும் கற்றுத்தர வேண்டும் என தெரிவித்தார்.
  இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  .கோபிதாஸ் அவர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.கணேசன் அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து