கருணாநிதி உடலுக்கு ராகுல் நேரில் அஞ்சலி

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      தமிழகம்
rahul tribute karunanidhi 2018 8 8

சென்னை : திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திநேற்று அஞ்சலி செலுத்தினார்.

காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம்  மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். இதையடுத்து கருணாநிதியின் உடல் சென்னை ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அஞ்சலி செலுத்தினார். ராகுல் காந்தியுடன் முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர் ஆகியோர் உடன் சென்றனர். முன்னதாக சில தினங்களுக்கு முன்புதான் ராகுல் காந்தி சென்னை வந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியை அவர் நேரில் பார்த்துவிட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து