முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற்றிட வலியுறுத்தி திருமங்கலத்தில் டூவீலர் மெக்கானிக்குகள் கதவடைப்பு போராட்டம்:

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற்றிட வலியுறுத்தி மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் டூவீலர் மெக்கானிக்குகள் கதவடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.
மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம் 1988-க்கு பதிலாக சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா என்ற புதிய சட்டத்தை 71திருத்தங்கள் மற்றும் 8புதிய பிரிவுகளை சேர்த்து இந்த சட்ட திருத்தத்தை செயல்படுத்திட முயற்சி மேற்கொண்டு வருகிறது.இதனால் சிறிய முதலீட்டில் டூவீலர் ஒர்க்ஷாப் நடத்தி வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வழங்கிட ஏற்பர்டுகள் நடைபெற்று வருகிறது.இந்த புதிய சட்டதிருத்தம் செயல்வடிவம் பெற்றிடுமானால் ஆங்காங்கே ஒர்க்ஷாப்கள் நடத்தி வரும் மெக்கானிக்குகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுமென கூறப்படுகிறது.இதையடுத்து மத்திய அரசு கொண்டுவரவுள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற்றிட வலியுறுத்தி தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரிலுள்ள டூவீலர் மெக்கானிக்குகள் நலச்சங்கத்தினர் சார்பில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற்றிட வலியுறுத்தி மாபெரும் கதவடைப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தை முன்னிட்டு திருமங்கலம் நகரிலுள்ள 50க்கும் மேற்பட்ட டூவீலர் ஒர்க்ஷாப்புகள் அடைக்கப்பட்டிருந்தது.பின்னர் திருமங்கலம் யூனியன் அலுவலகம் எதிரில் திருமங்கலம் நகர் டூவீலர் மெக்கானிக்குகள் நலச்சங்ககத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஜோதி,செயலாளர் ஜாய்ஸ்முஹரம்,பொருளாளர் சிவன்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மெக்கானிக்குகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற்றிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.ஒரே சமயத்தில் 50க்கும் மேற்பட்ட ஒர்க்ஷாப்கள் மூடப்பட்டிருந்ததால் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை பழுது நீக்கிட முடியாமல் திண்டாடினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து