நத்தத்தில் திமுகவினர் மவுன ஊர்வலம்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      திண்டுக்கல்
natham news

   நத்தம் - திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைந்ததையொட்டி நத்தம் ஒன்றிய, நகர திமுக சார்பாக அமைதி ஊர்வலம் நடந்தது. இதில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, பேரூர் செயலாளர் முத்துகுமார்சாமி, முன்னாள் யூனியன் தலைவர் ஜெயராஜ், முன்னாள் பொருளாளர் கமால், துணை செயலாளர்கள் குப்புசாமி, தன்ராஜ், நிர்வாகிகள் இஸ்மாயில், சோழன், பாப்பாபட்டி மணி, மஜீத், துரைமுருகன், ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னனதாக பஸ் நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் மூன்றுலாந்தர், அவுட்டர், மாரியம்மன் கோவில், கோவில்பட்டி, அண்ணா நகர் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையம் வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து