கருணாநிதி மறைவுக்கு ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      சினிமா
arrehman 2018 8 8

சென்னை : தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானார்.

இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், பூமியை விட்டு நீங்கள் சென்றிருக்கலாம். ஆனால், தமிழ் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு என்றும் நிலைத்திருக்கும் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து