கருணாநிதி மறைவு: நடிகர்கள் அஞ்சலி

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      சினிமா
kamal-rajini 2018 8 8

சென்னை : காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன்

ராஜாஜி அரங்கத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய கமல்ஹாசன் தெரிவித்ததாவது,

ஒரு நீண்ட சரித்திரத்தின் முற்றுப்புள்ளி அல்ல இது, ஒரு கமா என்று தான் நினைக்க வேண்டும். உணர்வும், இந்த சூழலும் எனது குரலை இந்த நிலைக்கு உயர்த்த முடியாத நிலைக்கு தள்ளியிருக்கிறது. கலைத்துறையில் ஒரு கடைக்குட்டி நான். நாட்டுக்கு ஒரு தலைவராக அவரை இழந்தது போக, தனிப்பட்ட முறையில் ஒரு பெரியவரை, குடும்பத்தின் தலைவரை இழந்தது போன்ற உணர்வு இருக்கிறது. கலைத்துறையில் அவரது ரீங்காரம் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நன்றி சொல்லும் ஆயிரமாயிரம் நடிகர்களில் நானும் ஒருவன். அந்த தமிழை பார்த்து மேலே ஏறி வந்திருக்கின்றேன். அவரை வணங்க வந்திருக்கிறேன். அவருக்கு வணக்கமும், மரியாதையும் தொடரும். இவ்வாறு பேசினார்.

அஜித்

நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர் கருணாநிதி என்று அஜித் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது.கருணாநிதியின் மறைவு குறித்து அஜித் விடுத்துள்ள அறிக்கையில், “முத்தமிழ் அறிஞர், மூத்த தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஐயா சொல்வன்மை, மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு, நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர்.அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும், என் சக தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.

நடிகர் விக்ரம்

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், கருணாநிதி மறைவுக்கு நடிகர் விக்ரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆளுநர் பன்வாரி லால் பிரோகித், கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஐந்துமுறை தமிழக முதல்வர் என பன்முக ஆளுமைக் கொண்ட டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கிறேன். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜீ.வி.பிரகாஷ்

கலைஞரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று ஜீ.வி.பிரகாஷ் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது. கருணாநிதியின் மறைவு குறித்து ஜீ.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கற்பனையில் மட்டுமே சாத்தியப்பட்டதை தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்டிய அரசியல் பெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு” என்று தெரிவித்திருக்கிறார்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து