ஆசியப் போட்டியில் இருந்து விலகினார் மீராபாய் சானு

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Mirabai Sanu 2018 8 8

ஜாகர்த்தா :  ஆசியப் போட்டியில் இருந்து விலகினார் இந்திய பளுதூக்கும் நட்சத்திர வீராங்கனையும், உலக சாம்பியனுமான மீராபாய் சானு.

அடையாளம் காண முடியாத முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ள மீராபாய் சானு ஆசியப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். வரும் 18-ம் தேதி ஜாகர்த்தாவில் ஆசியப் போட்டிகள் தொடங்கும் நிலையில் மீராபாய் சானு பளுதூக்குதலில் கண்டிப்பாக தங்கம் வெல்வார் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதற்கு பின், அவர் முதுகுவலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார். கடந்த வாரம் முதுகில் வலி குறைந்த நிலையில் மும்பையில் சிகிச்சை பெற்று மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் முதுகுவலி மீண்டும் ஏற்பட்ட நிலையில் ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க ஏதுவாக மீராபாய் ஆசியப் போட்டியில் இருந்து விலக வேண்டும் என தேசிய பயிற்சியாளர் விஜய் சர்மா பளுதூக்கும் சம்மேளனத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து அவர் ஆசியப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என இந்திய பளுதூக்கும் சம்மேளன செயலாளர் சகதேவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து