முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் கோவில் திருவிழாவில் 850 ஆடுகள், 2,000 கோழிகளை பலியிட்டு விடிய விடிய அன்னதானம்

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,-திண்டுக்கல்லில் நடந்த கோவில் திருவிழாவில் 850 ஆடுகள், 2 ஆயிரம் கோழிகளைக் கொண்டு பொதுமக்களுக்கு விடிய விடிய அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் முத்தழகுபட்டியில் பிரசித்தி பெற்ற செபஸ்தியார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இவ்வருடத்திற்கான திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள், சங்கத்தினர், வியாபாரிகள் மற்றும் வெளியூரை சேர்ந்த நபர்கள் கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைத்திருந்த ஆடுகள், கோழிகள் மற்றும் உணவுப்பொருட்களை காணிக்கையாக வழங்கினர். இவ்வாறு பொதுமக்கள் வழங்கிய 850 ஆடுகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள், 180 மூடை அரிசி மற்றும் உணவுப்பொருட்களை காணிக்கையாக வழங்கினர். அதனைக் கொண்டு 100க்கும் மேற்பட்ட சமையல் தொழிலாளர்கள் உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் கோவிலில் மன்றாட்டு ஜெபம், வேண்டுதல் நிறைவேற்றுதல் ஞீஜை நடத்தப்பட்டு சமபந்தி விருந்து தொடங்கியது. மாலையில் தொடங்கிய விருந்து விடிய விடிய நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்து உணவருந்தி சென்றனர். மேலும் பாத்திரங்களிலும் வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கையில், ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ஆடு, கோழி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உணவு சமைக்கப்படுகிறது. செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைக்கும் பக்தர்களுக்கு அது நிறைவேற்றிய கடவுளுக்கு தங்கள் சக்திக்கேற்றவாறு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அவ்வாறு செலுத்தும் காணிக்கை பொருட்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த பொருட்களைக் கொண்டு சமைக்கும் உணவு சாதி, மத பேதமின்றி அனைத்து மதத்தினரும் உண்ணும் வகையில் சமபந்தி விருந்தாக வழங்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து