ரபேல் போர் விமான விவகாரத்தை அரசியலாக்க கூடாது: அருண் ஜெட்லி

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      இந்தியா
arun jaitley 2017 10 9

புது டெல்லி : தேசிய பாதுகாப்பு விஷயங்களில் தனிப்பட்ட விஷயங்களுக்காக குறுகிய எண்ணத்தில் அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும்  என்று ரபேல் போர் விமானம் வாங்கியதில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.
யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், ரபேல் முறைகேடு  விவகாரத்தில், வெளியுறவுத்துறை செயலர் ஜெய்ஷங்கரும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் கூறுகையில், 2007-ம் ஆண்டு ஒப்பந்தப்படி 126 விமானங்கள் வாங்க பரிந்துரைக்கப்பட்டதற்கு மாறாக புதிய ஒப்பந்தப்படி 36 விமானங்கள் வாங்கப்படுவது குறித்து தங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளார்கள் என்று யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

அருண் ஷோரி கூறுகையில், ரபேல் விமானம் வாங்கும் ஒப்பந்தம் கிடைக்க வேண்டிய பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் வெளியே தள்ளப்பட்டு புதியதாக உருவாக்கப்பட்ட ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்துக்கு அதிக விலையில் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது  என்று குற்றம் சாட்டினார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில்,  தேசிய பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை எழுப்புபவர்கள் அவர்களுடைய பொறுப்பை உணர வேண்டும். தேசிய பாதுகாப்பு விஷயங்களில் தனிப்பட்ட விஷயங்களுக்காக குறுகிய எண்ணத்தில் அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து