முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வயது முதிர்வு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த  7-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட பல தேசிய தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், அமைச்சரவைக் கூட்டத்தில் அவரது மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து