கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      தமிழகம்
stalin homage 2018 8 9

சென்னை : தி.மு.க. தலைவர் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா நினைவிடத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி செவ்வாய்கிழமை மாலை மரணம் அடைந்தார். நேற்று முன்தினம் அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு வரிசையாக தலைவர்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா நினைவிடத்தில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ஆ.ராசா, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம், எ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து