முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலப்பர் கோவில் அருகே பழங்குடியின மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2018      தேனி
Image Unavailable

ஆண்டிபட்டி -    ஆண்டிபட்டி ஒன்றியம் வேலப்பர் கோவில் மலைப்பகுதியில் உள்ள பளியர் இன பழங்குடி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் வனச்சரகர் குமரேசன் தலைமையில் நடந்தது. ஆண்டிபட்டி மண்டல துணை தாசில்தார் சதீஷ் முன்னிலை வகித்தார்.
     தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாவூற்று வேலப்பர் கோவில் அருகே பழங்குடி இனத்தைச் சேர்ந்த 27 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 21 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்கு மலைகளில் சென்று பூமி சக்கரை கிழங்கு, நல்லாணி, பால்குலை, கடுக்காய், நெல்லிக்காய் ,சிறுகுறிஞ்சி, மாவலிங்கப்பட்டை, தேன் உள்ளிட்ட விளை பொருட்களை எடுத்து வந்து மூலிகை கடைகளில் விற்று சமையல் பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம். மேலும் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் அவர்களின் குல தெய்வமான மலை மீது உள்ள பளிச்சியம்மன் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து கிடா வெட்டி சாமி கும்பிடுவது வழக்கம். இதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்க வேண்டும். மேலும் பழங்குடி மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். குடி தண்ணீர் பிரச்சனை தீர ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். வீடில்லாமல் தெருவில் படுத்து உறங்கும் 17 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும். ரேசன் கார்டு, ஆதார் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ,கடந்த 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள அங்கன்வாடி மையம், சத்துணவு சமையல் கூடத்தை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பழங்குடி மக்கள் சார்பில் வைக்கப்பட்டது. பழங்குடியின சமுதாய உரிமைச் சட்டம் 2006 ன் கீழ், வாழ்வாதாரத்திற்காக மலைக்கு செல்லவும், கோவில் கும்பிடவும் அனுமதி உண்டு என்றும், அதே சமயம் மரங்கள் வெட்டி காடுகளை அழிக்கக் கூடாது, வன உயிரினங்களை துன்புறுத்தவோ ,வேட்டையாட வோ கூடாது என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மற்ற கோரிக்கைகள் வருவாய்த்துறையினர் மூலம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர் ஆதிசிவன், கிராம நிர்வாக அலுவலர் முத்துப்பாண்டி, வனக்காப்பாளர் மாயாண்டி, வேட்டை தடுப்பு காவலர் செல்வம் மற்றும் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து