இந்தியாவிலே பள்ளி கல்வித்துறைக்கு 27ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்து அம்மாவின் அரசு சாதனை படைத்துள்ளது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்:

வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2018      மதுரை
rpu photo  news

திருமங்கலம்- இந்தியாவிலே பள்ளி கல்வித்துறைக்கு 27ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அம்மாவின் அரசு சாதனை படைத்துள்ளது என டி.குண்ணத்தூரில் நடைபெற்ற விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித்துறையின் தரத்தை உயர்த்திடும் வகையில் தமிழகத்திலுள்ள 95 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்கொண்ட சீரிய முயற்சியின் பலனாக பேரையூர் தாலுகா டி.குண்ணத்தூரில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளி தற்போது மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இதையடுத்து டி.குண்ணத்தூர் மந்தை திடலில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு நூல்கள் வழங்கிடும் விழா நேற்று காலை வெகுசிறப்பாக நடைபெற்றது.ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு டி.குண்ணத்தூரில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு பல்வேறு நூல்களை வழங்கி வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: அம்மா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் அம்மாவின் அரசு நிறைவேற்றி வருகிறது.அந்த வகையில் நமது திருமங்கலம் தொகுதியில் டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.குண்ணத்தூரில் நீண்டகாலமாக உயர்நிலைப் பள்ளியாக இருந்து வந்த நிலையில் பொதுமக்களின் 25ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் மதுரை மாவட்டத்திலே முதல் பள்ளியாக டி.குண்ணத்தூர் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இந்தியாவிலே பள்ளி கல்வித் துறைக்கு 27ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அம்மாவின் அரசு சாதனை படைத்துள்ளது. அதே போல் திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இதே போல் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.மேலும் இந்த பகுதியின் வளர்ச்சிக்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவையெல்லாம் விரைவில் செய்யப்படும் என்று பேசினார்.
இவ்விழாவில் மதுரை புறநகர் மாவட்ட துணைச் செயலாளளர் அய்யப்பன்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி,டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி கட்சி நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன்,நெடுமாறன்,கல்யாணி,ராமகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து