13-ம் தேதி பாராளுமன்றம் கூடுகிறது: பாகிஸ்தான் பிரதமராக ஆக. 18-ம் தேதி இம்ரான் கான் பதவியேற்பு

சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2018      உலகம்
imrankan 2018 07 27

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் ஆகஸ்ட் 18 ஆம் தேதி பதவியேற்கிறார்.

116 இடங்களில் வெற்றி

பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான தெஹரீக் இ இன்சாப் 116 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக சில தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதனால் இம்ரான் கான் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டது.

அதிபர் உத்தரவு...

இந்நிலையில் வருகிற 13-ம் தேதி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு, அதிபர் மம்னூன் ஹூசைன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வருகிற 18 ஆம் தேதி இம்ரான் கான் பிரதமராக பதவியேற்பார் என அவரது கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற சபாநாயகராக சுவாபி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசாத் குவாசியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனினும், பதவியேற்பு தொடர்பாக அதிபர் மாளிகையிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், எடின்பர்க் செல்லவிருந்த அதிபர் மம்மனூன் ஹூசைன் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து