முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொந்த மண்ணில் அதிக விக்கெட்: அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்தார் ஆண்டர்சன்

சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

லார்ட்ஸ் : டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் பட்டியலில் அனில் கும்ப்ளே உடன் இணைந்தார் ஆண்டர்சன்.

மழையால் பாதிப்பு

இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல்நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால் 2-வது நாள் டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது.

பந்து வீச்சு தேர்வு

இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியாவின் முரளி விஜய், லோகேஷ் ராகுல ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். விஜய் ரன்ஏதும் எடுக்காமலும், லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்கள்.

ஆண்டர்சன் அபாரம்

இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ஆண்டர்சன் வீழ்த்தினார். இதன்மூலம் அவர் இங்கிலாந்து மண்ணில் 350 விக்கெட்டுக்களை கைப்பற்றி, சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை அனில் கும்ப்ளே உடன் பகிர்ந்துள்ளார்.

முதலிடத்தில் முரளிதரன்

இலங்கையின் முத்தையா முரளிதரன் 493 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்தில் உள்ளார். வார்னே 319 விக்கெட்டுக்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். ஆண்டர்சன் 140 போட்டிகளில் 546 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து