முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுப்பூதியம் உயர்த்தியதிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் செவிலியர்கள் நேரில் சந்தித்து நன்றி

சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தற்காலிக செவிலியர்கள் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது தொகுப்பூதியத்தை பெருமளவுக்கு உயர்த்தியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தமிழக மருத்துவமனைகளில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து பேசினர், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அரசு தற்காலிக செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு ரூ.7,700-லிருந்துரூ.14,000-ஆக உயர்த்தி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது:-

நிரந்தர செவிலியர்களாக...

தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரிய தற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்பட்டு ஆரம்பத்தில் மாத ஊதியமாக ரூ.7,700 வழங்கப்படுகிறது. இத்தற்காலிக செவிலியர்கள் நிரந்தர செவிலியர்கள் பணியிடங்கள் காலியாகும் பொழுது இக்காலிப்பணியிடங்களில் நிரந்தர செவிலியர்களாக பணிநிரந்தரம் செய்யப்படுகிறார்கள். தற்காலிக செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியமர்த்தும் இந்தமுறை இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் உறுதி...

நிரந்தமாக்கப்பட்ட செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயிக்கப்படும் பொழுது குறைந்தபட்சம் ரூ.36,000 ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அதாவது தற்காலிக செவிலியர்கள் நிரந்தரமாக்கப்படும் வரை ரூ.7,700 மட்டுமே தொகுப்பூதியம் பெற்றுவந்தனர். இத்தற்காலிக செவிலியர்களின் பணிகளையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில்கொண்டு அவர்களின் ஊதியத்தை உயர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டபேரவையில் உறுதியளித்தார்.

12,000 செவிலியர்கள்

இதனைத் தொடர்ந்து அம்மாவின் வழியில் செயலாற்றி வரும் இவ்வரசு தற்காலிக செவிலியர்களுக்கு வழங்கப்பட்ட தொகுப்பூதியத்தை ரூ.7,700லிருந்து ரூ.14,000 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணை வெளியிட்டார். இந்த ஊதிய உயர்வு முன் தேதியிட்டு 01.04.2018 முதல் வழங்கப்படும். மேலும், இவர்களுக்கு ஆண்டுந்தோறும் ரூ.500 ஊதிய உயர்வும் அளிக்கப்படும். இது தவிர தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டங்களுக்கான தொகையும் செலுத்தப்படும். இதன் மூலம் தொகுப்பூதியம் பெறும் 12,000 செவிலியர்கள் பயனடைவார்கள். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரில் சந்தித்து நன்றி

முதல்வரின் ஆணைக்கு சென்னை தலைமை செயலகத்தில் செவிலியர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர், இந்த சந்திப்பின் போது அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் ருக்மணி ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து