முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு தொடர்ச்சியில் தொடர் மழை: நெல்லையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

நெல்லை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது

கேரளாவில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையினால் நெல்லை மாவட்ட அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு கேரளா எல்லையில் உள்ள செங்கோட்டை மலைப்பகுதியில் குண்டாறு, அடவிநயினார் அணைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குண்டாறு, அடவிநயினார் அணைகள் நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளது. குண்டாறு அணைப்பகுதியில் நேற்று காலை வரை 46 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது, அடவிநயினார் அணையில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

நீர்மட்டம் உயர்வு

பாபநாசம் மலைப்பகுதியில் நேற்று காலை வரை 13 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக அணைக்கு வினாடிக்கு 3,140 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் நேற்றை விட 2 அடி உயர்ந்து நேற்று 116.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 130.44 அடியாக இருந்தது. அது நேற்று ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 137.96 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 111 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 355 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று அணை நீர் மட்டம் 70.90 அடியாக உள்ளது.

மழை அளவு
அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 128.25 அடியாக இருந்தது. நேற்று மேலும் 2 அடி உயர்ந்து முழுகொள்ளளவை அடைந்து 131 அடியாக உள்ளது. கடனாநதியில் முழுகொள்ளளவான 83.50 அடியில் நீர்மட்டம் உள்ளது. ராமநதியில் 79.25 அடியும், கருப்பாநதியில் 67.26 அடியும், கொடுமுடியாறு அணையில் 42 அடியும் நீர்மட்டம் உள்ளது.  நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
குண்டாறு - 40
செங்கோட்டை - 21
அடவிநயினார் - 20
பாபநாசம் - 13
தென்காசி - 9
சிவகிரி - 7
ஆய்குடி - 5.4
சேர்வலாறு - 5
கடனாநதி - 5
ராமநதி - 5
மணிமுத்தாறு -2.4
கருப்பாநதி - 2  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து