11 லட்சம் மனிதர்களின் பெயர்களை சூரியனுக்கு சுமந்து செல்லும் நாசா

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      உலகம்
nasa 2018 8 12

நியூயார்க் : சூரியனுக்கு மிக அருகில் செல்லும் பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட், 10 லட்சத்திற்கும் அதிகமான மனிதர்களின் பெயர்களை சூரியனுக்கு கொண்டு செல்கிறது.

சூரியனுக்கு மிக அருகில் செல்லும் வகையில் பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட்டை நாசா தற்போது வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.இதன் மூலம் நாசா உலக வரலாற்றில் புதிய மைக்கல்லை எட்டியுள்ளது. இதை உலகமே பெரிய அளவில் கொண்டாடி வருகிறது. இதுவரை சூரியனை இவ்வளவு அருகில் செல்லும் வகையில் யாரும் ராக்கெட்டை அனுப்பியதில்லை.

உலகில் மனிதர்கள் உருவாக்கியதிலேயே மிக அதிக வேகத்தில் உருவாக்கப்பட்ட விண்வெளி திட்டம் இதுதான். இதை முழுக்க முழுக்க சாட்டிலைட் என்று சுருக்கி விட முடியாது. இது சாட்டிலைட் செய்யும் பணிகளையும் தாண்டி நிறைய பணிகளை செய்கிறது. சோலார் காற்று குறித்து ஆராய்ச்சி செய்த விண்வெளி ஆராய்ச்சி நிபுணர் பார்க்கர் நினைவாக இதற்கு பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது மொத்தம் ஒரு மணி நேரத்தில் 430,000 மைல்கல் தூரம் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகிலேயே பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு வெளியே மனிதர்கள் உருவாக்கிய பொருள் ஒன்று இவ்வளவு வேகத்தில் செல்வது இதுவே முதல்முறை. இது 7 வருடம் சூரியனை ஆராயும் என்று கூறப்படுகிறது. 7 வருடமும் சூரியனை நிலையாக ஆராய்ச்சி செய்யும்.

இதற்காக டெல்டா ஐவி என்ற பெரிய ராக்கெட்டை கண்டுபிடித்து இருக்கிறார்கள். உலகிலேயே அதிக சக்தி கொண்ட ராக்கெட் இதுதான். இதில் 4 ராக்கெட்டை வைத்து ஏவி இருக்கிறார்கள். இது சூரியனில் இருந்து 59.5 லட்சம் கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்படும். சூரியனுக்கு மிக அருகில் செல்லும் மனிதன் உருவாக்கிய பொருள் இதுதான். இந்த ராக்கெட், இந்த வருடம் நவம்பரில் சூரியனுக்கு அருகில் திட்டமிடப்பட்ட இடத்திற்கு சென்று விடும். இந்திய மதிப்பில் இதற்கு ரூபாய் 10 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. சூரியனின் கரோனா பகுதியை சுற்றி வர போகும் முதல் விண்கலம் இதுதான். இதில் ஆச்சர்யமாக 11 லட்சம் மனிதர்களின் பெயர்கள் கொண்டு செல்லப்படுகிறது. சரியாக 1,137,202 பெயர்கள் கொண்டு செல்லப்படுகிறது. அந்த சாட்டிலைட்டில் ஒரு மெமரி கார்டு உள்ளது. அதில் இந்த பெயர்கள் ஏற்றப்பட்டுள்ளது. இதற்காக பெயர்களை பரிந்துரைக்க அறிவியல் பத்திரிக்கைகளில் நாசா முன்பே விளம்பரம் கொடுத்து இருந்தது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து