கேரளாவில் வெள்ளப் பாதிப்பு: நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ. 25 லட்சம் நிதியுதவி

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      சினிமா
surya 2018 01 17

சென்னை : வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி இணைந்து 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப் பகுதிகளில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 100 பேர் பலியாகியுள்ளனர். 28 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து கேரளாவுக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர். முதல்வர் நிவாரண நிதி திட்டத்துக்கு அவர்கள் இந்த நிதியை வழங்கியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து