முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி அருகே 5 வயது சிறுமி 160 மூலிகை தாவரங்களின் பெயர்களை கூறி உலக சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      தேனி
Image Unavailable

 போடி   போடி அருகே நடைபெற்ற சாம்பியன் உலக சாதனை நிகழ்ச்சியில் 5 வயது சிறுமி 1.27 நிமிடங்களில் 160 மூலிகை செடிகளின் பெயர்களை கூறி சாதனை படைத்தார்.
     தேனி நக்சத்திரா ஆகாடமி நிறுவனம் சார்பில் சாம்பியன் உலக சாதனைக்கான (Champion Wolrd Record) தேர்வு போடி துரைராஜபுரம் காலனியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி தலைவர் வடமலைராஜைய பாண்டியன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துரைராஜபுரம் காலனி கிராமத்தை சேர்ந்த கனகராஜ் - வனிதா தம்பதியரின் மகள் விகாஷினி (5) பங்கேற்று 1.27 நிமிடத்தில் 160 மூலிகை தாவரங்களின் பெயர்களை வரிசையாக கூறினார்.
     பின்னர் கணினி மூலம் காண்பிக்கப்பட்ட மூலிகை தாவரங்களின் பெயர்களையும் சரியாகக் கூறினார். இதனையடுத்து அவருக்கு சாம்யிபன் உலக சாதனையாளருக்கான சான்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கேரள மாநிலம் கொல்லம் வருமான வரித்துறை உதவி ஆணையர் முத்து மணிகண்டன், சாம்பியன் உலக சாதனை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் விஸ்வகாந்த் மற்றும் தேனி நட்சத்திரா அகாடமி நிறுவனத்தினர் பங்கேற்றனர்.
     சாதனை குறித்து மாணவி விகாஷினி கூறுகையில், தேனி நக்சத்திரா அகாடமியில் உலக சாதனை பதிவேட்டில் பதவு செய்வதற்காக பயிற்சி பெற்றதாகவும், இதற்கு முன் 7 வயது சிறுமி 3 நிமிடத்தில் செய்த சாதனையை முறியடித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து