முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் ரோஸ் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா:

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் விழா சிறப்பாக நடைபெற்றது.இதில் சங்கத்தின் தலைவராக செண்பகா.கே.முரளிதரன்,செயலாளராக ரம்யா சி. முருகேசன்,பொருளாளராக வி.திருப்பதி மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் சக்தி மஹாலில் திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் முன்னாள் மாவட்ட ஆளுநர் பொறியாளர் டி.பாண்டியராஜன்,உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் டி.தனிக்கொடி,பட்டயத் தலைவர் அனிதா.வி.பால்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திருமங்கலம் ரோஸ் அரிமா சங்க தலைவராக செண்பகா கே.முரளிதரன் ஆகியோருக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தனர்.இதை தொடர்ந்து சங்க செயலாளராக ரம்யா சி.முருகேசன்,பொருளாளராக வி.திருப்பதி,செயல்பாட்டு செயலாளராக பி.தங்கேஸ்வரன்,துணைத் தலைவர்களாக பி.கே.வேம்புவேந்தன்,ஆர்.பரமேஸ்வரன், உறுப்பினர் சேர்ப்பு நிர்வாகி த.இளங்கோ,சேவை நிர்வாகியாக சுந்தரம்,ஆளுமை நிர்வாகியாக மாரியப்பன்,ஒருங்கிணைப்பாளராக சிவசுப்பிரமணியன்ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.மேலும் ஸ்ரீதர்,வீரபாண்டி,செல்வராஜ்,ராஜதிலகர்,டாக்டர். ஜெ.அருண்பிரசாத், துர்காதேவன்,பார்த்திபன்,ரவிக்குமார்,கனகராஜ்,சத்தியேந்திரன் ஆகியோர் நிர்வாக குழு இயக்குநர்களாகவும், தங்கேஸ்;வரி,விசாலாட்சி,சண்முகமீனா, விஜயலட்சுமி, மலர்விழி, உமாவெண்ணிலா,விக்னேஷ்வரி,ஜெயலட்சுமி ஆகியோர் பெண்கள் நிர்வாககுழு உறுப்பினர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதை தொடர்ந்து திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ஸ்டெரெச்சர்,போர்வைகள் மற்றும் தலையணைகள்,நகரின் முக்கிய இடங்களில் விபத்தின் போது உதவிடும் முதலுதவி பெட்டிகள்,பள்ளிகளுக்கு கம்பி வலையுடன் கூடிய மரக்கன்றுகள்,ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து