முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் குறையும் பரப்பலாறு அணை நீர் மட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      திண்டுக்கல்
Image Unavailable

 ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், வடகாடு மலைப்பகுதியின் மேற்கு தொடர்ச்சி மலையில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மில்லியன் கன அடி ஆகும். தற்போது அணையில் 62 அடி தண்ணீர் உள்ளது. 38 மில்லியன் கனஅடி தண்ணீர் மொத்தகொள்ளவாக உள்ளது. வரத்து இல்லை. சத்திரப்பட்டி, விருப்பாட்சி, ஒட்டன்சத்திரம் ஆகியவற்றின் குடிநீருக்காக 3 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது,
இதன் மூலம் தாசரிபட்டி முத்துபூபாலசமுத்திரம், விருப்பாட்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையகுளம், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூர் ராமசமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய ஆறு குளங்கள் பாசன வசதி பெறுகிறது. பரப்பலாறு அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2034 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 289 ஏக்கர் நிலங்களும்; நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. சத்திரப்பட்டி, விருப்பாட்சி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பரப்பலாறு அணை உள்ளது. இந்தாண்டு போதியளவு தென்மேற்கு பருவமழை பெய்யாத காரணத்தினால் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள 6 குளங்களும் நிரம்பாமல் உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் கவலையடைந்துள்ளனர். இப்பகுதியில் ஒருசில ஊர்களைத் தவிர பிற ஊர்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலைதூக்க ஆரம்பித்துள்ளது. பரப்பலாறு அணையை தூர்வாராத காரணத்தினால் வண்டல் மண் மற்றும் கழிவுகள் சுமார் 30 அடி உயரம் வரை உள்ளது.  தென்மேற்கு பருவமழை பொய்ததால் வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். வனவிலங்குகளுக்கான அமைக்கப்பட்ட தொட்டிகளில் நீரை நிரப்பினால் வன விலங்குகள் தண்ணீரைத் தேடி ஊருக்குள் புகுவதை தடுக்கலாம் என மலைப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து