வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Badminton-India qualifies 2018 8 12

ஹோசிமின்சிட்டி : வியட்நாம் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் அஜய் ஜெயராம் தகுதி பெற்றுள்ளார்.

ஹோசிமின்சிட்டியில் வியட்நாம் ஓபன் சூப்பர் 100 போட்டி நடந்து வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம்  நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ஜெயராம் 21-14, 21-19 என்ற கேம் கணக்கில் 7-ம் நிலை வீரர் ஜப்பானின் யு இகராஷியை வென்று இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத் 21-17, 19-21, 21-14 என்ற கேம் கணக்கில் இந்தோனேஷியாவின் ஷெஸரிடம் தோல்வியுற்றார். ஆசிய போட்டிகளில் பங்கேற்க உள்ள நிலையில் இந்திய பாட்மிண்டன் வீரர்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து