26 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2018      உலகம்
pakistan 2017 6 8

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 இந்திய மீனவர்களை நல்லெண்ண நடவடிக்கையாக அந்நாட்டு அரசு  விடுதலை செய்துள்ளது.

பாகிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி, இந்திய மீனவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 இந்திய மீனவர்கள்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, 26 இந்திய மீனவர்களும், கான்ட் ரயில்வே நிலையம் வழியே லாகூருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

பின்னர் லாகூரில் இருந்து வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட 26 இந்திய மீனவர்களுக்கும் பரிசுகளும், பணமுடிப்புகளையும் அளித்திருப்பதாக கராச்சி சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து