வடக்கு அலாஸ்கா பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2018      உலகம்
earthquake

வாஷிங்டன் : வடக்கு அலாஸ்கா பகுதிகளில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வடக்கு அலாஸ்கா பகுதிகளில் 6.4 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளிவரவில்லை.

கடந்த 1995-ம் ஆண்டு வடக்கு அலாஸ்கா பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 5.2 என்ற அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு இந்நிலநடுக்கமே மிக்பெரிய நிலநடுக்கம் ஆகும். இந்நிலநடுக்கத்தால் பல இடங்களில் வலுவான நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்கள் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து