புதிய எம்.பி.க்கள் பங்கேற்கும் முதல் நாடாளுமன்ற கூட்டம் பாக்.கில் கூடியது

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2018      உலகம்
Pak Parliament 2018 8 13

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் கலந்து கொள்ளும் முதல் நாடாளுமன்றக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

நாடாளுமன்றத்தின் கீழவை நேற்று காலை 10 மணிக்கு கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அதிபர் மம்னூன் ஹுசைன், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி.க்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் கலந்து கொள்ளும் முதல் நாடாளுமன்ற கூட்டம் நேற்று கூடியது.

பாகிஸ்தான் அரசு சட்டப்படி, முந்தைய அரசில் அவைத் தலைவராக இருந்த அயஸ் சாதிக், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அதனைத் தொடர்ந்து புதிய அவைத் தலைவர் மற்றும் துணை அவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும்.

புதிய அவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு, அவருக்கும் பழைய அவைத் தலைவர் அயஸ் சாதிக் பதவி பிராமணம் செய்து வைப்பார். பின்னர் புதிய அவையின் பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்து விட்டு அயஸ் சாதிக் தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து