முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்ரான்கான் கட்சிக்கு 33 நியமன இடங்கள் - பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 342 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைப்பதற்கு 172 உறுப் பினர்கள் ஆதரவு தேவை. இதில் 272 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படு கின்றனர். மீதம் உள்ள 70 பேர் கட்சிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் நியமிக்கப்படுவர். இதில் 60 இடங்கள் பெண்களுக் கும் 10 இடங்கள் சிறுபான்மையினருக்காகவும் (முஸ்லிம் அல்லாத) ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நியமன இடங் களை அனைத்து கட்சிகளுக்கும் ஒதுக்கி உள்ளது. இதன்படி, பி.டி.ஐ. கட்சிக்கு 28 பெண்கள் மற்றும் 5 சிறுபான்மையின உறுப்பினர்கள் என 33 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அக்கட்சியின் பலம் 158 ஆக அதிகரித்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 14 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. எனினும், இம்ரான் கான் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 4 இடங்களில் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் பலம் 15 நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 82 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பி.பி.பி.) பலம் 11 நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 53 ஆக அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து