பட்டிவீரன்பட்டியில் குறுவட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா

திங்கட்கிழமை, 13 ஆகஸ்ட் 2018      திண்டுக்கல்
battalakundu news

வத்தலக்குண்டு - பட்டிவீரன்பட்டியில் குறுவட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் நா.சு.வி.வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
வட்டார அளவிலான மேஜை பந்து19 வயதிற்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவில் முதலிடமும், கைப்பந்து 14வயது மற்றும் 17வயதிற்கு உட்பட்டோர் ஆகிய இரண்டு பிரிவுகளில் முதலிடமும் பெற்றனர். பள்ளிகளின் மேலாண்மைக்குழு தலைவர் ராஜாராம் விழாவிற்கு தலைமையேற்று பரிசுகளை வழங்கினார். ஐந்து பள்ளிகளின் கல்வி ஆலோசனைக் குழுத் தலைவர் மோகன்அருணாச்சலம், மெட்ரிக் பள்ளி தலைவர் கருணாகரன், பெண்கள் பள்ளி செயலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமையாசிரியை வசந்தாவரவேற்றார். மாணவிகளுக்கு பயிற்சி வழங்கிய ஆசிரியர் மலர்வண்ணன், ஆசிரியைகள் தங்கமீனா, கலைச்செல்வி சுபாதேவி ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. எச்.என்.யூபி சங்கதுணைத்தலைவர் காமராஜ், செயலர் சங்கரலிங்கம், பெண்கள் பள்ளித் தலைவர் பொன்பாண்டி, தொடக்கப்பள்ளி செயலர் முருகானந்தம், ஆண்கள் பள்ளிச் செயலர் அய்யனார், வெங்கடேஷ், மெட்ரிக் பள்ளிச் செயலர் சிவசங்கர் என்ற பிரசன்னா, உதவி தலைமையாசிரியையகள் புஷ்பராணி, வசந்தா, பொன்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
மேஜை பந்து 18வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் யுவபிரபா, சௌந்தர்யா ஆகியோர் முதலிடம் பெற்றனர். கைப்பந்து 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் திரிசா, அர்ச்சனா, வைஸ்னவி, காவியப்பிரியா, சௌந்தர்யா, பிரியதர்ஷினி, பாண்டீஸ்வரி, பாண்டிச்செல்வி, சுருதி, சிவரஞ்சனி, புவனேஸ்வரி, லெட்சுமி ஆகியோர் முதலிடம் பெற்றனர். கைப்பந்து 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கனிமொழி, காவியா, வர்சா, ஸ்ரீமாரி, தீபா, விஜயலெட்சுமி, கிருத்திகா, பூபணா, அபிநயஸ்ரீ, ஆனந்தி, துர்கா, திவ்யஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்று பாராட்டு பெற்றார்கள்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து