முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுடன் போரில் ஈடுபடப் போவதில்லை ஈரான் திட்டவட்டம்

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

டெஹ்ரான், அமெரிக்காவுடன் நாங்கள் போரில் ஈடுபட போவதுமில்லை. அவர்களுக்கு நிபந்தனையும் விதிக்க போவதில்லை என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

ஈரானில் நிலவும் மக்கள் போராட்டம் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்புள்ளதா என்பன குறித்து அந்நாட்டுத் தலைவர் அயதுல்லா கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

பொருளாதார தடைகளைவிட போரை பற்றியும், நிபந்தனைகளை பற்றியும் நிறைய பேசப்படுகிறது. அவர்களுக்கு ஒருசில வார்த்தைகளை கூற விரும்புகிறேன். அமெரிக்காவுடன் போரும் இல்லை, அவர்களுடன் நிபந்தனைகளும் இல்லை. ஈரானில் நாள்தோறும் நடைபெறும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் வெளியிலிருந்து வரவில்லை. அவை உள்நாட்டினரால் உண்டாகிறது. பொருளாதார தடைகளினால் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் அதை நாம் எப்படி கையாளப்போகிறோம் என்பது மிக முக்கியம் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து