முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய சிறையில் இருந்த 7 பாக். கைதிகள் விடுவிப்பு

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

புது டெல்லி,இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த 7 கைதிகள் நல்லெண்ண நடவடிக்கையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில்,

7 பாகிஸ்தான் கைதிகள் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக, கடந்த 7-ம் தேதி பாகிஸ்தான் மீனவர்கள் 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான புதிய அரசு வரும் 18-ம் தேதி பதவியேற்கவுள்ளது. இதையொட்டி, பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 27 மீனவர்கள் உள்ளிட்ட 30 இந்திய கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் கைதிகளை இந்தியாவும் விடுவித்துள்ளது.

இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பிற நாட்டு மீனவர்களை, தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி கைது செய்து வருகின்றன. இருப்பினும், பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அவர்களை விடுதலை செய்வதை இரு நாடுகளும் வழக்கமாக கொண்டுள்ளன.
அதேபோல், சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் பிற நாட்டு கைதிகளை விடுதலை செய்யும் முறையை இரு நாடுகளும் கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து