ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தின் 80-வது பொதுக்குழு கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      விருதுநகர்
ramco news

ராஜபாளையம்  - ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமிராஜா நூற்றாண்டு திருமண மண்டபத்தில் தொழில் வர்த்தக சங்கத்தின் 80வது பொதுக்குழு கூட்டம் ராம்கோ குரூப் சேர்மனும், சங்கத்தலைவருமான பி.ஆர்.வெங்கட்ராமராஜா தலைமையில் நடைபெற்றது.முன்னதாக துணைத்தலைவர் பத்மநாபன் வரவேற்று பேசினார்.செயலாளர் வெங்கடே~;வரராஜா ஆண்டறிக்கை வாசித்தார்.நாராயணசாமி முதன்மை விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.சிறப்பு அழைப்பாளராக திருப்பு}ர் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தலைவர் நாகராஜன் கலந்து கொண்டார்.
பின்னர் விழாவில் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா பேசும் போது:
தன்னை மீண்டும் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. 80வது பொதுக்குழ கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அமர்ந்திருக்கும் ராம்ராஜ் காட்டன்சேர்மன் நாகராஜன்; தமது தொழில் வளர்ச்சியில் மட்டும் குறிக்கோளாகக்கொள்ளாமல் சமூக சேவை மூலம் பொதுமக்களின் சேiவியலும் தனது செயல்பாட்டைவிரிவுபடுத்தி வருபவர். இதே போல நாம் நமது தொழிலை வளர்சிசயடையச் செய்வதுடன்பொது ஜன சேவையையும் நாம் செய்ய வேண்டும். இந்த வகையில் எனது தாத்தா ஆரம்பித்த இச்சங்கம் அன்று முதல் வணிகர்களுக்கு மட்டும் சேவை செய்யாது இந்நகரின் ஒட்டு மொத்த வளர்சிக்கும் பாடுபட்டு வருகிறது. இதன் மூலம் தான் நகரின் புறவழிச்சாலை, ரயில்வே மேம்பாலம், தாமிரபரணி குடிநீர், கூடுதல் ரயில் சேவைகள் ஆகியவை நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கோட்பாடுகளை நமது வணிகர்கள் எளிதில் புரிந்து கொண்டு தங்களின் வியாபாரத்தில்எளிதில் கையாள்வதற்குரிய பயிற்சி வகுப்புகளையும், அரசு அறிவித்து அமல்படுத்தும்புதிய திட்டங்கள் சட்ட விதிமுறைகளைப்பற்றிய விழிப்புணர்வு கூட்டங்களும் சம்பந்தப்பட்டதுறை வல்லுனர்களின் உதவியுடன் நடத்தி வருகிறது. இம்மாதிரியான வளர்ச்சிப்பணிகளில் ‘ராம்கோ’ நிறுவனமும் உறுதுணையாக இருந்து செயல்படும் என உறுதி கூறுகிறேன். இவ்வாறு பேசினார்.விழா முடிவில் இணைச்செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து