சுதந்திர தினவிழாவையொட்டி மாணவர்களின் உலக சாதனை நிகழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      திண்டுக்கல்
dglginnes  news

திண்டுக்கல், - சுதந்திர தினவிழாவை  முன்னிட்டு திண்டுக்கல்லில் பள்ளி மாணவ, மாணவிகள் தேச ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய வரைபடம் போல் ஒன்று கூடி நின்று சாதித்து காட்டினர்.
திண்டுக்கல் புது காப்பிளியபட்டியில் இயங்கி வரும் ஸ்ரீகுருமுகி வித்யாஸ்ரம் சி.பி.எஸ்.சி. பள்ளியில் இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சிகளை மேற்கொண்டனர். 703 குழந்தைகள் பங்கு பெற்று இரண்டு விதமான உலக சாதனைகளை நிகழ்த்தினர். மேலும் 703 விடுதலை போராட்ட வீரர்களின் சரிதைகளை எடுத்துரைத்தனர். வேடசந்தூர் எம்.எல்.ஏ. டாக்டர் பரமசிவம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சுதந்திர போராட்ட தியாகி ராமு.ராமசாமி, பள்ளி தாளாளர் திவ்யா செந்தில்குமார், சேர்மன் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உலக சாதனை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் நட்சத்திரா அகாடமி முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திரத்திற்காக உயிரை துச்சமான மதித்து போராடிய மாபெரும் வீரர்களின் ரத்தம் மண்ணில் பாய்ந்த பின் தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. இவர்களுடைய அசாதாரண பங்களிப்பை அடுத்து தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவது நம் கடமை மட்டுமல்ல. நன்றி கடனும் கூட. இதுவே இச்சாதனை முயற்சிக்கு தூண்டுகோளாக அமைந்தது. இச்சாதனை கின்னஸ் சாதனைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து