முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லார்ட்ஸ் டெஸ்ட் தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பி.சி.சி.ஐ திட்டம்

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இங்கிலாந்தில் 2 டெஸ்ட் ஆட்டங்களில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் இதுதொடர்பாக கேப்டன் விராட் கோலி, தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கோர பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது.

இன்னிங்ஸ் தோல்வி...

லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. 1974-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் சந்தித்த மோசமான டெஸ்ட் தோல்வி இதுவாகும்.

கடும் விமர்சனம்

இந்திய அணி முதல் இன்னிங்சில் 107 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 130 ரன்னிலும் ‘ஆல்-அவுட்’ ஆனது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 88.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக பேர்ஸ்டோ 93 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கிறிஸ்வோக்ஸ் 137 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணியில் இரண்டு இன்னிங்சிலும் அஸ்வின் (29 ரன்கள், ஆட்டம் இழக்காமல் 33 ரன்கள்) தான் அதிகபட்ச ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி போராட்டம் இல்லாமல் இங்கிலாந்து அணியிடம் பணிந்தது கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.

பி.சி.சி.ஐ. திட்டம்...

இங்கிலாந்தில் 2 டெஸ்ட் ஆட்டங்களில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் இதுதொடர்பாக கேப்டன் விராட் கோலி, தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கோர பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது.  அடுத்த மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற என்ன உத்தி, வியூகம் கடைபிடிக்கப் போகிறீர்கள். அணி வீரர்கள் தேர்வில் கோலி, சாஸ்திரிக்கு வானாளாவிய அதிகாரம் தரப்பட்டுள்ள நிலையில் 2 டெஸ்ட் தோல்வியால் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட உள்ளதாக பி.சி.சி.ஐ. வட்டார தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து