மோடி - இம்ரான் பேச்சால் இரு தரப்பு உறவு வலுவடையும்: பாக். தூதர்

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2018      உலகம்
Pak ambassador 2018 8 15

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற இம்ரான்கானை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியது இரு தரப்புக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் என்று இந்தியாவுக்கான அந்நாட்டு தூதர் சோஹைல் முகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் அமைந்துள்ள அந்நாட்டு தூதரகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது அவர் இவ்வாறு கூறினார்.
வரும் 18-ஆம் தேதி இம்ரான்கான் பிரதமராக பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு இம்ரான் கானுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் சுதந்திர தின விழா டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரக அரங்கில் நடைபெற்றது. அந்நாட்டின் கொடியை ஏற்றி வைத்த தூதர் சோஹைல் முகமது, பாகிஸ்தானியர் அனைவரும் வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், மோடி - இம்ரான் இடையேயான பேச்சு முக்கியமானது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு வலுவடையும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து