இந்தியாவிற்கு எதிராக தொடரை 4-0 என கைப்பற்ற இது சரியான நேரம் - இங்கி. முன்னாள் வீரர் நாசர் ஹூசைன்

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Nasser hussaien 2018 8 15

லண்டன் : 2016-ல் இந்தியாவிடம் 0-4 எனத் தோல்வி அடைந்ததற்கு பதிலடி கொடுக்க இது சரியான நேரம் என்று நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

முன்னிலை

இங்கிலாந்து அணி கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. அதன்பின் நான்கு போட்டிகளிலும் இந்தியா வெற்றியடைந்து 4-0 என இங்கிலாந்தை வீழ்த்தியது. தற்போது இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது.

சரியான நேரம்...

3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் வருகிற சனிக்கிழமை நடக்கியது. பேட்டிங்கில் தடுமாறும் இந்தியாவை 2016 தோல்விக்கு பதிலடி கொடுக்க இதுதான் சரியான நேரம் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார். அத்துடன் லார்ட்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் போராட்டமின்றி தோல்வியடைந்தனர். இது பெரியவர்களுக்கும், சிறவர்களுக்கும் இடையிலான போட்டி போன்று இருந்தது என்றும் சாடியுள்ளார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து