முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2018      தேனி
Image Unavailable

கம்பம்,-தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடும் வெள்ளப் பெருக்க காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து இன்று புதன்கிழமை  வனத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.தென் தமிழகத்தின் தலை சிறந்த சுற்றுலாத் தலமும் தென் மாவட்டத்தின் சின்ன குற்றலாமான சுருளி அருவியில் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை மற்றும் சாரல் மழையால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் மேகமலை ஹைவேவிஸ் மலைப் பகுதியில் கன மழை பெய்து வருவதால் அருவியில் வரும் தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் மணல் கல் போன்றவைகளுடன் தண்ணீர் விழுகிறது.இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு வனப் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து