சச்சின், கங்குலி, லஷ்மண் கொண்ட கவுர கமிட்டியை பெய்டு குழுவாக மாற்ற பிசிசிஐ முடிவு

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
BCCI 2017 5 7

ஆக : சச்சின் தெண்டுல்கர், கங்குலி, லஷ்மண் ஆகியோரை கொண்ட கவுரவ கமிட்டியை பெய்டு குழுவாக மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணி கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. டோனி தலைமையிலான இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என இழந்தது. இதனால் தலைமை பயிற்சியாளரான டங்கன் பிளெட்சர் அதிரடியாக நீக்கப்பட்டார். அதன்பிறகு ரவி ஷாஸ்திரி மானேஜராக நியமிக்கப்பட்டார். இவர் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டார். நீண்ட நாட்கள் ரவி ஷாஸ்திரி தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். அதன்பிறகு நிரந்தரமாக தலைமை பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க பிசிசிஐ சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, லஷ்மண் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி (CAC) அமைத்தது.

பெயரை பரிந்துரை...

இந்த குழுவின் முக்கிய வேலை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு சிறப்பான பயிற்சியாளர்கள் பெயரை பரிந்துரை செய்வதுதான். இவர்கள் பரிந்துரை செய்யும் ஒரு நபரை பிசிசிஐ பயிற்சியாளராக நியமிக்கும். இந்த பணிக்கு நாங்கள் சம்பளம் வாங்கமாட்டோம். கவுரவமாக இந்த பணியை செய்கிறோம என்றனர். இதனால் கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டியை கவுரவ பதவியை பிசிசிஐ வைத்திருந்தது. இந்நிலையில் இந்த குழுவிற்கு சம்பளம் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
ஆலோசகராக...
ஒருவேளை இந்த மூன்று பேருக்கும் சம்பளம் வழங்கப்பட இருந்தால், பிசிசிஐ-யின் இரட்டைப் பதவி ஆதாயத்தில் சிக்குவார்கள். கங்குலி மேற்கு வங்காளம் கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ளார். லஷ்மண் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஆலோசகராக உள்ளார். சச்சின் தெண்டுல்கரின் மகன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடுகிறார். ஆகையால் ஏதாவது ஒன்றை இவர்கள் இழக்க வேண்டும். ஒருவேளை இது அமல்படுத்தப்பட்டால் மூன்று பேரும் ஆலோசனைக் குழுவில் இருப்பார்களா? என்பது சந்தேகம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து