ராமநாதபுரத்தில் கோலாகலமாக நடந்த சுதந்திர தின விழா

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2018      ராமநாதபுரம்
rmd news

  ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
      ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தினவிழா  நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, தேச ஒற்றுமையை  வலியுருத்தும் விதமாக சமாதான புறாக்களை பறக்க விட்டார். தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பின்பு, தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளைக் கௌரவித்தார். பின்னர், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 28 காவல்துறை அலுவலர்கள், 6 காவல்துறை சார்ந்த அமைச்சுப் பணியாளர்கள், பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த 64 அரசு அலுவலர்கள், நயினார்கோவில் பகுதியில் நிகழ்ந்த குற்ற சம்பவத்தின் போது (சங்கிலி பறிப்பு முயற்சி), நிகழ்நேரத்திலேயே குற்றவாளிகளை பிடிக்க காவல்துறைக்கு உதவியாக இருந்த 3 பொது மக்கள், இரத்த தானம் முகாம்களில் சிறப்பாக செயல்பட்ட ஒரு ஆசிரியர் என மொத்தம் 72 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
     மேலும், பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் மொத்தம் 83 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 03 லட்சத்து 83 ஆயிரத்து 300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  அதன் பிறகு, ஆர்.காவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கும்பரம் அரசு உயர்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் அரசு இசைப்பள்ளி ஜவஹர் சிறுவர் மன்றம், எம்.ஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் பங்கு பெற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் சரக டி.ஐ.ஜி.காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹெட்சிலீமா அமாலினி, பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன்,  இணை இயக்குநர் (வேளாண்மைத்துறை) எல்.சொர்ணமாணிக்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி, முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்து உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து