ராமேசுவரம் திருக்கோயிலி்ல் சுவாமி,அம்பாள் திருக்கல்யாண உற்சவ விழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018      ராமநாதபுரம்
rms kovil news

  ராமேசுவரம்,-  ராமேசுவரம் திருக்கோயிலில் ஆடிதிருவிழாவையொட்டி 12  ம் திருவிழா நிகழ்ச்சியான  சுவாமி,அம்பாள்  திருக்கல்யாணம்  நிகழ்ச்சி புதன் கிழமை இரவு திருக்கோயிலில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி,அம்பாளின்  அருள்பெற்று சென்றனர்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடித்திருவிழா கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவின் 12 ம் நாள்  நிகழ்ச்சியான ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் திருக்கல்யாணம் உற்சவ நிகழ்ச்சி புதன்கிழமை திருக்கோயில் தெற்கு நந்தவனம் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இரவு 7 மணிக்கு கோயிலிருந்து சுவாமி,அம்பாள் பூ அலங்காரத்துடன் சன்னதியிலிருந்து மேலதாளத்துடன் புறப்பாடகி கோயிலின் மூன்றாம் பிரகாரம் தெற்கு பகுதி வழியாக உலா வந்து திருக்கல்யாண அலங்கார மணமேடைக்கு வந்தடைந்து.அங்கு சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும்,தீபரதணை வழிபாடுகளும் நடைபெற்றன. தொடர்ந்து கோயிலின் மூத்த குருக்கள் விஜய் போகில்,விஜய் ஆனந்த் ஆகியோர்கள் 7.56 மணிக்கு சுவாமி,அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்தி வைத்தன.பின்னர் அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்பாளின் அருள்பெற்றனர். நிகழ்ச்சியில் திருக்கோயிலின் இணை ஆணையர்  மங்கையர்க்கரசி தலைமையில் திருக்கோயில் அலுவலர்களுக்கும்,ஊழியர்களுக்கும் மற்றும் திருக்கோயில்குருக்கள்களுக்கும் ராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா குமரன் சேதுபதி சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டன.மேலும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் ராமேசுவரம் கோயில் தக்கார் குமரன் சேதுபதி, கோயில் உதவி்க்கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்கானிப்பாளர்கள் ககாரீன்ராஜ்,பாலசுப்பிரமணியன்,பேஷ்கார்கள் அண்ணாதுரை,கலைச்செல்வம்,கண்ணன்,செல்லம்,இணை ஆணையர் நேருமுக உதவியாளர் கமலநாதன், கோயில் அலுவலர் செல்லம்,ஹோட்டல் அதிபர் வீரபாகு,மீனவர் சங்கதலைவர் தேவதாஸ்,யாத்திரைப்பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன்,பா.ஜ கட்சியின் தேசியபொதுக்குழு உறுப்பினர் முரளிதரன், காங்கிரஸ் மாநில நிர்வாகி பாரிராஜன்,  மற்றும் கோயில் ஊழியர்களும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்துகொண்டனர்

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து