கள்ளிக்குடியை தலைமையிடமாக கொண்ட புதிய தாலுகாவை முதல்வர் எடப்பாடியார் தொடங்கி வைத்தார்:

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018      மதுரை
tmm news

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் தெகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடியை தலைமையிடமாக கொண்ட புதிய தாலுகாவை தமிழக முதல்வர் எடப்பாடியார் வீடியோ கன்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.இதை தொடர்ந்து கள்ளிக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மதுரை கலெக்டர் கொ.வீரராகவராவ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
வருவாய் துறையின் அனைத்து நடைமுறைகளும் பல்வேறு திட்டங்களும் பொதுமக்களுக்கு எளிதாக கிடைத்திடும் வகையில் தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது சிரமங்களை குறைத்திடும் வகையில் கள்ளிக்குடியை தலைமையிடமாக கொண்ட புதிய தாலுகாவை அமைத்திட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்கொண்ட நடவடிக்கையின் பலனாக கள்ளிக்குடியை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் வட்டம் (தாலுகா) அமைப்பது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.இதனை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள கள்ளிக்குடி தாலுகாவை தொடங்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்திடும் நிகழ்ச்சி நேற்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.இதில் தமிழக முதல்வர் எடப்பாடியார் கலந்து கொண்டு கள்ளிக்குடியை தலைமையிடமாக கொண்ட புதிய தாலுகாவை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து புதிய தாலுகாவாக உதயமான கள்ளிக்குடியில், காவல் நிலையம் எதிரில் ஊராட்சி ஒன்றிய பொது சேவை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திறப்புவிழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் முன்னாள் கள்ளிக்குடி யூனியன் சேர்மன் உலகாணி எம்.கே.மகாலிங்கம் வரவேற்று பேசினார். இவ்விழாவில் மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் கலந்து கொண்டு தலைமையேற்று குத்துவிளக்கேற்றி வைத்தார்.பின்னர் அங்கு திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரை யாற்றியதுடன் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு சிறப்பான சேவை செய்திடுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் கொ.வீரராகவராவ் கூறியதாவது: பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று கள்ளிக்குடியை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் வட்டத்தை தமிழக முதலமைச்சர் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்துள்ளார்.இதில் கள்ளிக்குடி குராயூர் சிவரக்கோட்டை ஆகிய மூன்று குறுவட்டங்களும்,47 வருவாய் கிராமங்களும் உள்ளது.தற்போது 256.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவினை கொண்டுள்ள கள்ளிக்குடி வட்டத்தில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 77,880 மக்கள் தொகை உள்ளது.தாசில்தார்,சமூக பாதுகாப்பு தாசில்தார் உள்ளிட்ட 19 அலுவலர்கள் இங்கு பணியமர்த்தப் பட்டுள்ளனர்.கள்ளிக்குடி வட்டத்தின் புதிய தாசில்தாராக செல்வராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த அலுவலகம் ஊராட்சிஒன்றிய பொது சேவை மையத்தில் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்விழாவில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன்,உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்,திருமங்கலம் தாசில்தார் நாகரத்தினம்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் உலகாணி எம்.கே.மகாலிங்கம்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் பிரபுசங்கர்,அன்னலட்சுமி,கட்சி நிர்வாகிகள் வேல்பாண்டி,கண்ணன்,வேல்ராமகிருஷ்ணன்,போதும்பொண்ணு,சுபான்பாய்.மாரிசாமி,முருகன்,அன்னமுத்து,ராமையா,டி.எஸ்.ஆதி(எ)ராஜா,நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவின் நிறைவில் கள்ளிக்குடி தாசில்தார் செல்வராஜன் நன்றி கூறினார்.

 

 

 

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து