திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018      ஆன்மிகம்
TirumalaTirupatiDevasthanams 2018-08-16

திருப்பதி,திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

வேத விற்பன்னர்கள் வேதம் முழங்க, கோயில் கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு, கும்பாபிஷேக நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்தனர். கும்பாபிஷேக நீரை கலசங்களில் ஊற்றும் போது கோவிந்தா கோவிந்தா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை முட்டியது. பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால் தீவிர பாதுகாப்புப் போடப்பட்டது.

திருமலை திருப்பதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருமலை திருப்பதி மகா கும்பாபிஷேகத்துக்காக பல டன் மலர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து