இந்திய அணி கோலியை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பது நியாயம் அல்லஇலங்கை முன்னாள் வீரர் சங்ககரா கருத்து

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Sangakkara 2017 8 22

ஆக.இந்திய அணி விராட் கோலியை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பது நியாயம் அல்ல. திறமையான வீரர்கள் உள்ளனர் என்று சங்ககரா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டன் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. விராட் கோலி 200 ரன்கள் அடித்ததால் எட்ஜ்பாஸ்டனில் 31 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

ஆனால் லார்ட்ஸில் 23, 17 என நாற்பது ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. தொடக்க பேட்ஸ்மேன்கள் தவான், லோகேஷ் ராகுல், முரளி விஜய், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் புஜாரா, ரகானே, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் திணறி வருகிறார்கள்.

இதனால் இந்தியா முழுக்க முழுக்க விராட் கோலியை நம்பியே இருக்கிறது. அவர் ஒன் மேன் ஆர்மியாக இருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், பேட்டிங்கில் ஜாம்பவான விளங்கியவரும் ஆன சங்ககரா, இந்திய அணி கோலியை மட்டுமே சார்ந்திருக்கிறது என்பது நியாயம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சங்ககரா கூறுகையில் ‘‘கடந்த சில வருடங்களாக விராட் கோலியை பேட்டிங் செய்து வருவதை பார்க்கையில் அவருடன் மற்ற பேட்ஸ்மேன்களை ஒப்பிடுவது நியாயம் அல்ல. அவருடைய ஆட்டத்தை பார்க்கும் போது நம்பமுடியாத வகையில் இருக்கும். சிறந்த பெர்மார்மர்.

ஆனால், மற்ற வீரர்கள் சிறந்தவர்களே. புஜாரா, ரகானே உண்மையிலேயே சிறந்த பேட்ஸ்மேன்க்ள. புஜாரா டெஸ்டில் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். ரகானே வெளிநாட்டில் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார். மற்ற வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். பார்மில் இருக்கும்போது கேஎல் ராகுல் அபாயகரமானவர். முரளி விஜய், ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் குறைந்தவர்கள் அல்ல’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து