எளிமையாக நடக்கும் பதவியேற்பு விழாவில்பாகிஸ்தான் பிரதமராக இன்று பதவியேற்கிறார் இம்ரான் கான்

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018      உலகம்
imrankan 2018 07 27

இஸ்லாமாபாத்,பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த விரும்பும் இம்ரான் கான், டீ, பிஸ்கட்டுடன் தனது பதவியேற்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் புதிய பிரதமராக தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் இன்று பதவியேற்க உள்ளார். இவர் தனது பதவியேற்பு விழாவை மிகவும் எளிமையாக நடத்த விரும்புவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் தனது நெருங்கிய நண்பர்கள் உட்பட மிக முக்கியமான சிலருக்கு மட்டுமே இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தார். அழைக்கப்பட்டிருக்கும் விருந்தினருக்கு டீ, பிஸ்கட் மட்டும் கொடுத்து உபசரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் ஏற்படும் அதிகப்படியான செலவுகளை தவிர்க்கவே இதுமாதிரியான முடிவுக்கு வந்ததாக கட்சி தலைமை கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து