முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடைத்தாள் திருத்துவதில் மெத்தனம் ஆயிரம் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய பள்ளிக் கல்வித்துறை

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத 1000 ஆசிரியர்கள் யார்-யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடைபெற்றது.

தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியானது. பொதுத் தேர்வுகளை நன்றாக எழுதியும், சரியாக மதிப்பெண் கிடைக்காத மாணவர்களுக்கு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய தேர்வுத்துறை சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி 2500-க்கும்மேற்பட்டவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறுமதிப்பீடு முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் 1000 மாணவர்களின் விடைத்தாள் கூட்டல் மற்றும் மதிப்பீடு பிழைகளால் மதிப்பெண் மாறியது.

இந்த விடைத்தாள்களை தேர்வுதுறையினர் ஆய்வு செய்து அவற்றை திருத்திய ஆசிரியர்கள், சரிபார்த்த விடை திருத்தும் மைய அதிகாரிகள் குறித்த பட்டியல் தயார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத 1000 ஆசிரியர்கள் யார்-யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம் கேட்டுநோட்டீசு அனுப்பி உள்ளது.

விடைத்தாள் திருத்துவதில் ஆசிரியர்கள் மெத்தனமாகவும், அஜாக்கிரதையாகவும் திருத்தியதால் நிறைய குளறுபடி நடந்துள்ளதால் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோட்டீசுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து