முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவிற்கு வெள்ள நிவாரணத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கிய நடிகர் விஜய்சேதுபதி

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

திருவனந்தபுரம்,கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.

கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் அம்மாநிலம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. 

கேரளாவில் மழை வெள்ளத்தால் இதுவரை 167 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 41 பேர் காயமடைந்துள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. 1,65,538 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2,857 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், 3,393 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கேரள மக்களுக்கு பலரும் நிவாரண நிதிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். முன்னதாக நடிகர் தனுஷ்,சித்தார்த், கமல்ஹாசன்,சூர்யா, கார்த்தி ,விஷால் ஆகியோர் உதவி அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து