முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள மதுபானங்கள் மீதான வரியை உயர்த்தியது கேரள அரசு

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், கேரளாவில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக மதுபானங்கள் மீதான வரியை அம்மாநில அரசு உயர்த்தியுள்ளது.

தென் மேற்கு பருவ மழை தீவிரத்தால் கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற விபத்து சம்பவங்களில் 167 பேர் உயிரிழந்து உள்ளனர்.

எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கேரளாவிற்கு பெரும் பொருளாதார இழப்பு நேரிட்டுள்ளது. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு கேரள மாநில அரசு கோரிக்கையை விடுத்துள்ளது.

இந்நிலையில் மாநிலத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக, அந்த மாநில அரசு மதுபானங்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளது.

கேரள மாநில அரசு மதுபானங்கள் மீதான கலால் வரியை அடுத்த 100 நாட்களுக்கு மட்டும் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கூடுதலாக 230 கோடி கிடைக்கும்

மாநிலத்தில் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்வதற்கு அதிகமான நிதி தேவை ஏற்பட்டுள்ளது. இந்த கடினமான சூழ்நிலையில் இருந்து நாம் மீண்டுவர வேண்டும்.

அதனால் அடுத்த 100 நாட்களுக்கு மதுபானங்கள் மீதான கலால் வரியை 0.5 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. உயர்த்தப்படும் வரியினால் கிடைக்கும் நிதி முழுவதும் வெள்ளநிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். இதனால் அரசுக்கு ரூ.230 கோடி கூடுதலாக  கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து