கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனத்தை விருதுநகர் கலெக்டர் சிவஞானம் கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018      விருதுநகர்
vnr news 22

 விருதுநகர் - விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தென்மேற்கு பருவமழையால் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இடுக்கி மாவட்டத்திற்கு ரூ.5 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வெள்ள நிவாரண அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது:-
தென்மேற்கு பருவமழையால் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு கேரளா மாநிலத்தில் பெயத கனமழையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொது மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, பால் பவுடர், எண்ணெய், பெண்களுக்கு தேவையான உடைகள், நைட்டிஸ், பெட்சிட், பாய், லுங்கி குழந்தைகளுக்கு தேவையான நாப்கின்ஸ்  மற்றும் மருந்து பொருட்கள் போன்ற பொருட்கள் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
 அதாவது, ரூ. 70 ஆயிரம் மதிப்பலான அரிசி முட்டைகள், ரூ. 42 ஆயிரத்து 950 மதிப்பலான பருப்பு வகைகள், ரூ.13 ஆயிரத்து 500 மதிப்பலான கோதுமை பாட்கெட்கள், ரூ. 62 ஆயிரம் மதிப்பலான சமையல் எண்ணெய் டின்கள், ரூ. 20 ஆயிரம் மதிப்பலான குடிநீர் பாட்டில்கள், ரூ. 60 ஆயிரம் மதிப்பலான ப்ரெட், பேரீட்சை, பிஸ்கட் போன்ற பொருட்கள், ரூ. 9500 மதிப்பலான பால் பவுடர், ரூ. 37 ஆயிரத்து 500 மதிப்பலான பாய்கள், ரூ. 1 லட்சத்து 73 ஆயிரத்து 950 மதிப்பலான பெண் மற்றும் ஆண்களுக்கு தேவையான உடைகள், நைட்டிஸ், பெட்சிட், லுங்கி குழந்தைகளுக்கு தேவையான நாப்கின்ஸ்  மற்றும் மருந்து பொருட்கள், ரூ. 60 ஆயிரம் மதிப்பலான இதர பொருட்கள் என பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் என மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் லாரி மூலம் ஏற்றி கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ள நிவாரண அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்  .அ.சிவஞானம், பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.உதயகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  செந்தில்குமாரி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.அனுராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து