முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர் என்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லியில் தெரிவித்தார்.

புது டெல்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
சேவையாற்றியவர்..பாரதீய ஜனதா ஆட்சியின் மூத்த தலைவர், 50 ஆண்டு காலம் இரு அவையினுடைய உறுப்பினராக இருந்து சிறந்த முறையில் பணியாற்றியவர்.

பாரதீய ஜனதா கட்சியின் வெற்றிக்குப் பிறகு பிரதமராக முதலில் பொறுப்பேற்றவர். வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர்.

3 முறை நாட்டின் பிரதமராக இருந்து சிறப்பான முறையில் சேவையாற்றியவர்.

சிறந்த தலைவராக பொறுப்பு வகித்தவர். சிறந்த இலக்கியவாதி, பேச்சாளர், நிர்வாகத் திறன் மிக்கவர். அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர், வாஜ்பாயின் மறைவு நாட்டுக்கே பேரிழப்பு. தங்க நாற்கர சாலை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தவர்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து