முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. செயற்குழு ஒத்திவைப்பு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை

வரும் 20ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டு, வருகின்ற 23ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக்கழகத்தில் நடைபெறும்.

செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவி்த்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து