பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2018      உலகம்
Imran Khan Pakistan  new prime minister 2018 08 18

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

பாகிஸ்தானில் கடந்த ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் 116 இடங்களைக் கைப்பற்றிய பி.டி.ஐ. கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவானது. நவாஸ் ஷெரீப் கட்சியின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 96 இடங்களைக் கைப்பற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களில் வென்றது.

இதையடுத்து 342 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 172 உறுப்பினர்கள் தேவை. இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சி வெற்றி பெற்ற இடங்களுக்கு ஒதுக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆகியவற்றைச் சேர்க்கும் போது அந்தக் கட்சிக்கு 176 பேரின் ஆதரவு கிடைத்து ஆட்சி அமைக்கும் தகுதி பெற்றது.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 176 உறுப்பினர்களின் ஆதரவுடன் இம்ரான் கான் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து நேற்று பாகிஸ்தான் அதிபர் மம்மூன் ஹுசை ன் முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் பாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுக் கொண்டார்.

பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். மேலும் பதவியேற்பு விழாவில் அவரது மத ஆலோசகரும், 3-வது மனைவியுமான புஷ்ரா மனேகாவும் கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து